எனது பதிவுகள்

October 12, 2011

Facebook ல் தடை செய்ய முடியுமா?


வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

Facebook ல் தடை செய்ய முடியுமா?


இன்று உலகில் face book கணக்கு இல்லாதவர்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லலாம் உலகில் எந்த இடத்தில் இருப்பவர்களையும் இலகுவாக தொடர்பு கொள்ள ஓரே தளமாகவும் உள்ளது இதன் சேவையால் பல வருடங்களாக பிரிந்திருந்த சகோதரர்கள் கூட மீண்டும் சந்தித்துள்ளார்கள் மொழி, மதம், இனம் இவை எதையும் பார்க்காமல் மிகவும் அன்போடு அனைவருடனும் தொடர்பு கொள்ள உதவுகின்றது மேலும் இதில் இலவச வீடியோ ஷாட்டிங் முறையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் ஆயிரம் நல்லவற்றை செய்யும் face book ல் ஒரு சில தீமைகளும் இருக்கின்றன இதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

                           அதில் முக்கியமான ஒன்று தீயவர்களின் நட்பு ஒரு சிலர் தேவையற்ற செக்ஸ் படங்களையும் போட்டோக்களையும் பதிவேற்றி வைத்துள்ளனர் இன்று பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் அதிகளவு face book பயன்படித்துகின்றார்கள் ஆகவே வேண்டாத படங்களை பார்த்து அவர்கள் எதிர்காலமே வீணாகிவிடும் ஆபத்தும் உள்ளது ஆனால் அதே face book ல் நமக்கு வேண்டாத நண்பர்களையோ அல்லது தொல்லைதரும் நபர்களையோ தடைசெய்யும் வழிமுறைகளையும் வைத்துள்ளது எவ்வாறு தடைசெய்வது என்று பார்ப்போம் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.

HOME என்பதை கிளிக் செய்து Privacy settings என்பதை தெரிவுசெய்து கீழ் உள்ள படத்தை பாருங்கள்.


 அதில் Blocked people and apps என்பதில் இருக்கும் Manage Blocking என்பதை தெரிவு செய்யுங்கள் கீழ் உள்ள படத்தில் போன்று காணப்படும் அதில் name என்பதில் உங்களிட்கு வேண்டாத நபரோ அல்லது நண்பரதோ face book பெயரினை டைப் செய்யுங்கள் ஈமெயில் முகவரி தெரிந்தால் டைப் செய்யுங்கள் அல்லது பெயர் மட்டுமே போதும் இனி block என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான் இதுவரை உங்களிட்கு தொல்லை கொடுத்தவர் உங்கள் கணக்கில் இருந்து நீக்கப்பட்டிருபார் ஹலோ ஹலோ என்ன என் பெயரை டைப் செய்ரிங்க? எனக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.


குமரன்

2 comments:

rampo said...

unga thakaval mikavum payanullathaka ullathu.

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி Rampo.

Post a Comment