அன்புத்தோழர்களே!

நீங்கள் எக்செல்லில் ஏதேனும் ஒரு தகவலினை டைப்செய்து வைதுள்ளீர்கள் ஆனால் அதனை சில மணித்தியாலங்களின் பின்னர் அல்லது உங்களிட்கு தேவைப்படும் போது பிரிண்ட் எடுக்கின்றீர்கள் எனவைத்துக்கொள்வோம் அப்போது நீங்கள் டைப்செய்யாமலே பிரிண்ட் எடுத்த நேரம் உங்கள் எக்செல் சீட்டில் பிரிண்டாகிருந்தால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதனை மீண்டும் பார்க்கும்போது சரியாக என்ன திகதி எத்தனை மணிக்கு இதனை பிரிண்ட் எடுத்தோம் என தெரிந்துகொள்ளலாம்.
அலுவலகங்களில் பணிபுரிபவர்களுட்கு இது மிக முக்கியமாக இருக்கும் உங்கள் உயர் அதிகாரி உங்களைக்கூப்பிட்டு இதனை எப்போது பிரிண்ட் எடுத்தாய் எனக்கேட்டால் நாம் யோசித்துக்கொண்டிருப்பொம் ஆகவே date and time function பயன்படுத்தினால் நீங்கள் பிரிண்ட் எடுத்த நேரமும் திகதியும் அதில் பதிவாகி இருக்கும் இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

நீங்கள் சேமித்துவைத்துள்ள எக்செல் சீட்டினை ஓப்பன் செய்து கொள்ளுங்கள் அதில் எந்த இடத்தில் நேரம் தேவைப்படுகின்றதோ அந்த செல்லில் =NOW() என டைப் செய்து எண்டர் தட்டுங்கள் அவ்வளவுதான் உங்கள் கணனியில் காணப்படும் திகதியும் நேரமும் வந்திருப்பதைக்காணலாம் இனி சேவ் செய்துவைதுக்கொள்ளுங்கள் எப்போது நீங்கள் பிரிண்ட் எடுத்தாலும் பிரிண்ட் எடுக்கும் நேரமும் திகதியும் பதிவாகிவிடும் என்ன தோழர்களே பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள் வருடத்தின் கடைசி மாதம் என்பதால் வேலை அதிகம் பதிவெழுத நேரம் குறைவாகவே கிடைக்கின்றது தொழர்களே உங்கள் ஓட்டும் கருத்துக்களுமே என்போன்ற பதிபவர்களை உட்சாகப்படுத்தும் எனவே உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.
ஓட்டுப்போட்டால் ஒரு கோப்பி இலவசம்.........
kumaran
2 comments:
தெரிந்து கொண்டேன்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.
Post a Comment