எனது பதிவுகள்

December 05, 2011

Start Menu ல் Delete எப்படி தடைசெய்வது?


தொழர்களே இதற்கு முந்தய பதிவில் control panel பாதுகாப்பது பற்றி பார்த்தோம் இன்று start menu ல் சென்று delete செய்வதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.
                        சிறுவர்கள் இல்லாவிட்டால் அது வீடே இலலை என பெரியவர்கள் சொல்லுவார்கள் ஏனெனில் எத்தனை குழப்படிகள் செய்தாலும் அவர்களால்தான் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் அதேபோன்று சிறுவர்களிடம் இருந்து கணனியை பாதுகாப்பதும் நமக்கு பெரிய சவால்தான் என்ன தோழர்களே உண்மைதானே அதற்காகத்தான் இதுபோன்ற சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறுவர்மட்டுமல்ல பெரியவர்களிடம் இருந்தும் நமது கணனியினை பாதுகாப்பாக வைத்திருக்கலாம் கீழ் குறிப்பிட்டுள்ளதுபோல் Registry ல் சிறுமாற்றம் செய்தால் போதும்.
                                                                                                                  Run command Regedit என டைப்செய்து HKEY_CURRENT_USER\software\ Microsoft\windows\current version\policies\ explorer என்பதை தெரிவுசெய்து அதன் வலது பக்கத்தில் name , type ,data என்பதில் மவுசினை வைத்து Right கிளிக் செய்து new DWORD Value என்பதில் கிளிக்செய்து அதன் பெயர் NoChangeStartMenu எனக்கொடுத்து அதன் value 1 எனக்கொடுங்கள் அவ்வளவுதான் கீழ் உள்ள படத்தினைப்பாருங்கள்.
 இனி Start Menu ல் சென்று கணனியில் நிறுவியிருக்கும் மென்பொருள்மீது மவுசினைவைத்து Right கிளிக் செய்துபாருங்கள் என்ன தொழர்களே பதிவு பயனுள்ளதாக் இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.



kumaran

3 comments:

kumaran said...

தகவலுக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்த்தேன். தெரியவில்லை நண்பரே! மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்.
தகவலுக்கு நன்றி நண்பரே!

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!இதற்கான ரெஜிஸ்ரி கோட் பைல் என்னிடம் உள்ளது தேவைப்பட்டால் கேளுங்கள் உங்கள் மெயிலிட்கு அனுப்பிவைக்கிறேன்.

Post a Comment