எனது பதிவுகள்

September 25, 2011


வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

இன்று மொட்டைத்தலைக்கு முடி வைப்போம்.....

சிலர் வீர வசனம் பேசுவார்கள் இது எல்லாம் எனக்கு இதுக்கு சமன் என்று தலைமுடியை காட்டுவார்கள் அதெல்லாம் சும்மா பந்தாக்குதாங்க.பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களிட்கும் அழகு சேர்ப்பது தலைமுடிதான் என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே நாம் தினமும் கண்ணாடி முன் நின்று பலமுறை சரிபார்த்துக்கொள்வது நம் தலைமுடியைத்தான் ஆனால் இப்போது இருக்கும் பெரும் பிரச்சினையே சிறுவயதில் முடி கொட்டுவதுதான் என்னால் உங்களிட்கு மீண்டும் முடிமுளைக்க வைக்க முடியாது ஆனால் உங்கள் போட்டோவில் எப்படி முடி வைப்பது என்று பார்ப்போம் கான் சேர்,ஸ்ரீரிதர் சேர் மாதிரி எனக்கு போட்டோ சொப் தெறியாதுங்க தவறு இருந்தால் மன்னிச்சிடுங்க இந்த டீல் ஓகேதானே?
முதலில் போட்டோசொப்பை ஓபன் செய்து அதில் file - open என்பதை கிளிக் செய்தால் கீழ் உள்ள படத்தில் போன்று வந்திருப்பதை காணலாம்.
உங்களிட்கு தேவையான மொட்டைத்தலை போட்டோவை தெரிவு செய்துகொள்ளுங்கள்.

இனி நல்ல முடி இருக்கும் தலைஉள்ள போட்டோவையும் ஓபன் செய்துகொள்ளுங்கள் தெரிவு செய்த போட்டோவில் தலைமுடியை மட்டும் lasso tool செலெக்ட் செய்து கட் செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
கட் செய்த முடியை மட்டும் move tool செலெக்ட் செய்து மொட்டைத்தலை மீது வைத்துவிடுங்கள் இப்போது அதன்மேல் மவுசைவைத்து ரைட் கிளிக் செய்து warp செலெக்ட் செய்து தேவையான அளவினை சரிசெய்து கொள்ளுங்கள் கீழ் உள்ள படத்தில் இருப்பதுபோல் alt அழுத்தி add layer mask கிளிக் செய்யுங்கள்
அவசியம் கவனிக்க வேண்டிய விடயம் foreground white ஆகவும் background black ஆகவும் இருக்கவேண்டும் நீங்கள் மொட்டைத்தலைமீது வைத்த முடி மறைந்திருப்பதை காணலாம் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
 இனி history brush தெரிவு செய்து எந்த இடங்களில் முடி இல்லாமல் இருக்கின்றதோ அங்கெல்லாம் brush செய்யுங்கள் அவ்வளவுதான் இப்போது மொட்டைத்தலையில் முடி வளர்ந்திருப்பதை காணலாம் குறைகள் இருந்தால் சொல்லுங்கள் இந்த பதிவை வாசிக்கும் போது எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருதுங்க எல்லாருடைய மாடும் ஓடுதுன்னு ஐயர் வளர்த்த பேத்தை மாடும் வாலை தூக்கிக்கொண்டு ஓடிச்சாம் அதுபோலத்தாங்க என்பதிவும் அப்டித்தானே நினைக்கின்றீர்கள் ஹா....ஹ...ஹ...

kumaran








No comments:

Post a Comment