எனது பதிவுகள்

September 29, 2011

pinnacle தொடர்....5


நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

pinnacle தொடர்....5

இன்று உங்களிடம் இருக்கும் போட்டோ அல்லது ஏதேனும் நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களிட்கு MP3 பாடல்களை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம் முதலில் வழமைபோல் pinnacle ஓபன் செய்து கொள்ளுங்கள் 2edid தெரிவு செய்து அதில் நான்காவதாக உள்ள show phots and fram grabs என்பதை தெரிவு செய்து select a different folder for show phots and fram grabs கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.உங்களிட்கு தேவையான போட்டோவினை தெரிவு செய்துகொள்ளுங்கள் தெரிவு செய்த போட்டோவின் மீது மெளசை வைத்து அழுத்தி இழுத்து வந்து untitled என்பதற்கு கீழ் உள்ள முதலாவது video track லைனில் வைத்துவிடுங்கள் இனி மீண்டும் 2edit ல் ஐந்தாவதாக இருக்கும் show audio file என்பதை கிளிக் செய்து select a deifferent folder for sound effect என்பதை கிளிக் செய்து செமித்து வைத்துள்ள MP3 படலை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.


இப்போது தெரிவு செய்த MP3 பாடல்மீது மெளசால் அழுத்தி இழுத்துவந்து untitled என்பதட்கு கீழ் 6 வதாக உள்ள sound effect track என்பதில் வைத்துவிடுங்கள் கீழ் உள்ள படத்தில் போன்று இருக்கும்.

இனி 2edid தெரிவு செய்து show transitions கிளிக் செய்து உங்களிட்கு தேவையான effect மீது கிளிக் செய்யுங்கள் நீங்கள் போட்டோவைத்துள்ள லைனை தெரிவு செய்திருத்தல் அவசியம் அவ்வளவுதான் உங்கள் அழகான போட்டோக்கள் அனைத்தும் தெரிவு செய்த MP3 பாடலுடன் இனைந்து வீடியோவாக வந்திருக்கும் இனி முன்பு சொன்னதுபோல் 3 make move கிளிக் செய்து உங்களிட்கு தேவையான இடத்தில் சேமித்துக்கொள்ளுங்கள் விரும்பினால் DVD அல்லது CD ஆகவும் பதிவு செய்து கொள்ளலாம் என்ன நண்பர்களே இனி உங்களிடம் இருக்கும் நினைவுச்சின்னமான போட்டோக்கள் அனைத்தையும் இனிய இசையுடன் பார்த்து மகிழலாம் அதே சந்தோஷத்தோடு எனக்கு ஒரு ஓட்டுப்போட்டால் நானும் உங்களைபோன்று சந்தோஷப்படுவேன் ஓகேதானே?
kumaran

7 comments:

Post a Comment